டிசம்பர் 1, 2022: “இலங்கையின் மலாய் சமூகத்தினர் இந்த நாட்டின் சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பிரிவினர் என்றும் இலங்கையின் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டிலும் இவர்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையின் மிகச்சிறிய சமூகங்களில் ஒன்றாக இருந்தாலும், மலாய் மலாய் சமூகத்தினர் இலங்கையின் தேசத்தை கட்டியெழுப்புவதில் சம பங்காளியாக ஏனைய சமூகங்களுடன் பங்களித்துள்ளனர்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
பிரதம மந்திரி குணவர்தன “காலனித்துவத்திற்கு முந்தைய காலத்திலிருந்து பிந்தைய காலனித்துவ காலம் வரை, இலங்கை மலாய் சமூகத்தினர் , ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் அவர்களின் விலைமதிப்பற்ற சேவைகள் மற்றும் தியாகங்கள் மூலம் இலங்கை சமூகத்தின் கட்டமைப்பில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்
“டாக்டர். டி.பி. ஜயா தனது நாட்டை சமூகத்திற்கு முன் நிறுத்திய ஒரு தலைவராக அங்கீகரிக்கப்படுகிறார், மேலும் இலங்கையர்களாக நீடித்த நல்லிணக்கத்தின் மூலம் மலாய் மக்களின் உன்னத பாரம்பரியங்களை தொடர்ந்து வளப்படுத்துமாறு மலாய் சமூகத்தின் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று பிரதமர் குணவர்தன மேலும் கூறினார்.
நவம்பர் 29, 2022 அன்று கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் மலாய் சமூகத்தினர் ’ காபி டேபிள் புத்தகத்தைக் குறிக்கும் வகையில் இந்தச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது 2022 இல் கொழும்பு மலே கிரிக்கெட் கிளப்பின் 150 வது ஆண்டு நிறைவையும், இலங்கை மலாய் சங்கத்தின் 100 வது ஆண்டு விழாவையும் குறிக்கும் வகையில் இந்த புத்தகம் மலாய் சமூகத்தினர்களின் கதையை பரந்த இளைய தலைமுறை சமூகத்திற்கு ஒரு உத்வேகமாக எழுதப்பட்டது.
இப் புத்தகத்தின் விலை ரூ. 10,000 இதனை malaysofsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது +94 77 737 9995 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த விற்பனையில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் கொழும்பு மலாய் கிரிக்கெட் கிளப் (CMCC) கிளப்ஹவுஸ் மற்றும் மைதானத்தை பராமரிக்க பயன்படுத்தப்படும்.
மலாய் சமூகத்தினர் தேசத்தை கட்டியெழுப்புவதில் மிக முக்கிய பங்கு வகித்தனர் – ஜனாதிபதி

Leave a comment