டிசம்பர் 26, 2022, கொழும்பு: இந்த ஆண்டின் (2022) முதல் 11 மாதங்களில் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக 3,596 பேர் கடத்தப்பட்டதாக காவல்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக 3,596 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு கடத்தல்களின் எண்ணிக்கை 835 ஆக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடும்போது சுமார் 2800 கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.