டிசம்பர் 26, 2022, கொழும்பு: எம்வி சில்வர் ஸ்பிரிட் என்ற பயணிகள் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு நேற்று திருகோணமலையை வந்தடைந்தது. இந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரோப் ஜெட்டியில் நிறுத்தப்பட்டிருந்தது.
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்த மிகப் பெரிய சுற்றுலாப் பயணிகள் குழு இது என்றும், தாய்லாந்திற்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் போது சிகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களுக்குச் செல்வதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார். அவர்களிடமிருந்து துறைமுக அதிகாரசபைக்கு 2.1 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.