ஜனவரி 01, 2023, கொழும்பு: 2023 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்றும், அதில் இலங்கை பொருளாதாரத்தை திருப்ப திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும் தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்தித்திறன்மிக்க இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் தைரியமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.