ஜனவரி 15, 2023, கொழும்பு: அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப சமூக நீதி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்றார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சகல இனங்களும் இணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும் ஜனாதிபதி தெரிவித்ததாவது; 75 வருடங்களுக்கு முன்னர் மறைந்த திரு. டி.எஸ். சேனாநாயக்கவினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அடையாளத்திற்கு அனைவரும் திரும்ப வேண்டும்.
நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கை பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனவும், அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை கூட்டி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.