பெப்ரவரி 03, 2023, கொழும்பு: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இருதரப்பு நட்பை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் எதிர்பார்த்துள்ளதாகவும், இரு நாட்டு மக்களுக்கான அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பார்வையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் பிடென் கூறினார்.