பெப்ரவரி 08, 2023, கொழும்பு: புது தில்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கர்னல் அவிஹாய் ஜஃப்ரானி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவை பிப்ரவரி 6 ஆம் தேதி விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடிய பின்னர், விமானப்படை தளபதி மற்றும் வருகை தந்திருந்த உயரதிகாரிகள் நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.