பெப்ரவரி 14, 2023, கொழும்பு: பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கத்தைச் சேர்ந்த அஜித் தென்னகோன் இன்று குற்றஞ்சாட்டினார். தடுப்புப்பட்டியலில் உள்ள இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது.இந்த தவறை சரி செய்ய அரசை வலியுறுத்துகிறோம், என்றார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே இலங்கை சந்தைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு NMRA யினால் அங்கீகரிக்கப்படாத இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாக விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.