மார்ச் 04, 2023, கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையானது, SLPPயின் தலைவர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நீக்க தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை அண்மையில் கூடிய போது இந்த தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்பி சாகர காரியவசம் தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பிரசன்னமாகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு பொருத்தமான நபரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவில் சமூக உறுப்பினர் ஒருவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரத்தில் நிறைவேற்று சபை கூடும் போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம் தெரிவித்தார்.