ஜனவரி 19, 2023, கொழும்பு: இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், டாக்டர். எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகிறார். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முக்கியஸ்தர்களை மரியாதைனிமித்தமான சந்திப்பினை மேற்கொள்வார். வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கருடன் இணைச் செயலர் (IOR) புனித் அகர்வால், இயக்குநர் சந்தீப் குமார் பய்யப்பு, துணைச் செயலர் (இலங்கை) நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் ரகூ பூரி ஆகியோர் கலந்துகொள்வார்கள்.