ஏப்ரல் 10, 2023, கொழும்பு: இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துகளின் கட்டணத்தை பயணிகள் செலுத்துவதற்கு QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று (ஏப்ரல் 09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏழு இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களுக்கான 26 பஸ்களை விநியோகிக்கும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.