டிசம்பர் 2, 2022: Economist Intelligence Unit (EIU) ஆல் நடத்தப்பட்ட உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, 2022 இல் உலகின் மிகக் குறைந்த செலவில் உள்ள நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது.
சமீபத்திய உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, உலகின் மலிவான நகரங்களின் முதல் பத்து இடங்களில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.
161 வது தரவரிசையுடன், கொழும்பு இந்தியாவின் பெங்களூருடன் இணைந்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் சென்னை மற்றும் அகமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி என்பன செலவு குறைந்த நகரங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, டமாஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை அதி மலிவான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, இது இந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரங்கள் மற்றும் நாணயங்களைப் பிரதிபலிக்கிறது.
இதற்கிடையில், நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் என்பன உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
உலகின் செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு தெரிவு

Leave a comment