ஒட்டாவா, கனடா – கனடாவில் சீனா அதிகாரப்பூர்வமற்ற வெளிநாட்டு காவல் நிலையங்களைச் செயல்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 4-ம் தேதி கனடா-சீனா நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கையில், உலக விவகார கனடாவின் வட ஆசியா மற்றும் கடல்சார் பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் வெல்டன் எப், குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், “இது இரு நாடுகளுக்கு இடையேயான எந்தவொரு முறையான காவல்துறைக்கும் அப்பாற்பட்டது”.
மேலும் “குற்றம் சாட்டப்படும் செயல்பாடு முற்றிலும் சட்டவிரோதமானது, முற்றிலும் பொருத்தமற்றது என்றும் கனடா இதற்க்காக மிகவும் தீவிரமான பிரதிநிதித்துவங்கள் மற்றும் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் ” என்று எப் கூறினார்.
கன்சர்வேடிவ் எம்.பி.யும், வெளியுறவுத்துறை விமர்சகருமான மைக்கேல் சோங், சீன ஆட்சிக்கு உலகளாவிய விவகாரங்கள் எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது குறித்து பிரதிநிதித்துவம் செய்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். நிறுவப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் நிலையங்கள் “கனேடியர்களை அச்சுறுத்துவதற்கும், சீனாவுக்குத் திரும்பிச் செல்லும்படி வற்புறுத்துவதற்கும்” பயன்படுத்தப்படுவதாகவும் எம்.பி மேலும் கூறினார்.
ஒன்ராறியோவின் டொராண்டோவில் உள்ள மூன்று நிலையங்கள் உட்பட 30 நாடுகளில் 54 சீன அதிகாரப்பூர்வமற்ற வெளிநாட்டுக் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது; அதில் இரண்டு மார்க்கம் நகரிலும் மற்றுமொன்று ஸ்கார்பரோவில் இயங்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது .