டிசம்பர் 01, 2022 – கொழும்பு: புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில், புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் போது விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்து புதிய கடவுச்சீட்டை பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும்.
“விண்ணப்பதாரர்கள் அதை தங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம். அவர்கள் தங்கள் கைரேகைகளை கொடுக்க மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 50 முன் அலுவலகங்களை அமைக்க திணைக்களம் எதிர்பார்க்கின்றது. விண்ணப்பதாரர் தங்கள் கைரேகையை கொடுக்க அருகிலுள்ள அலுவலகத்திற்குச் செல்ல ஆன்லைன் சந்திப்பு வழங்கப்படும். புதிய முறை அமலுக்கு வரும்போது பாஸ்போர்ட் பெறுவதில் நிலவும் நெரிசல் குறையும்.
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும், பாஸ்போர்ட்டை வீட்டிற்கு வழங்குவதற்கும் ஒரு நாள் விண்ணப்பதாரர்களுக்கான கூரியர் தபால் சேவை மற்றும் சாதாரண விண்ணப்பதாரர்களுக்கான தபால் வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஸ்டுடியோக்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் ஏற்றவாறு வசதி செய்து கொடுக்கப்படுமென்றும் கூறினார்.
புதிய கடவுச்சீட்டுகளுக்கான திடீர் கோரிக்கையுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய, தனது திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் தினசரி சுமார் 2,500-3,000 கடவுச்சீட்டுகளை அதன் சாதாரண கொள்ளளவை விட அதிகமாக வழங்குவதாக சுட்டிக்காட்டினார். “திணைக்களம் காலை 6.30 மணியளவில் வேலையைத் தொடங்குகிறது, மேலும் எங்கள் அதிகாரிகள் இரவு 7 முதல் 10 மணி வரை தேவையைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து வேலை செய்கிறார்கள். எனினும், கடவுச்சீட்டு பெற்றவர்களில் 20-30 வீதமானவர்கள் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதை நாம் கணக்கெடுப்பு மூலம் கண்டுபிடித்தோம். உடனடியாக வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை என்றால், பாஸ்போர்ட்டுகளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல முயற்சித்த 99 பேரை திணைக்களம் இந்த வருடம் கைது செய்துள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணத் திருத்தம் குறித்து தெளிவுபடுத்திய கட்டுப்பாட்டாளர் நாயகம், ரூபாய் மதிப்பு சரிவினால் திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கட்டணம் அமெரிக்க டாலரில் குறிப்பிடப்பட்டதாக தெரிவித்தார். “இது உண்மையில் கட்டண உயர்வு அல்ல அப்போது கட்டணம் அமெரிக்க டாலர் 1950 (ரூ. 350,000), இப்போது 2,000 அமெரிக்க டாலராக அதனை மாற்றியுள்ளோம் என்று அவர் விளக்கினார்.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு பல நுழைவு வசதிகளுடன் கூடிய ஒரு வருட விசா அல்லது ஐந்தாண்டு விசாவைப் பெறுவதற்கான வசதிகளையும், USD 200,000 அல்லது அதற்கு மேல் அரச வங்கிகளில் அல்லது குடியிருப்புக்கட்டிடத்தொகுதிகளில் திறைசேரி முறிகள், திறைசேரிப்பத்திரம்கள் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 5-10 ஆண்டுகளுக்கு நீண்ட கால குடியிருப்பு விசாக்களையும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடவுச்சீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜனவரி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

Leave a comment