பெப்ரவரி 24, 2023, கொழும்பு: உலகின் முதல் 1,000 சிறந்த பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் மூலம் 1,000 சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களில் இது 901 வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆராய்ச்சி, வெளியீடு, மாநாடுகள், சர்வதேச ஒத்துழைப்பு போன்ற 13 குறிகாட்டிகளைக் கருத்தில் கொண்டு இந்த உலகளாவிய வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ள இலங்கையின் ஒரே பல்கலைக்கழகம் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகும்.