நவம்பர் 30, 2022 – கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஷிரந்தி ராஜபக்ஷவும் நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பு ஷேக் உஸ்மான் வலியுல்லாஹ் தெவதகஹா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர். பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் ரியாஸ் சாலி மற்றும் அறங்காவலர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை வரவேற்றனர். அஷ் செயிட் அல் ஹாஃபில் கலாநிதி ஹசன் மௌலானா அவர்கள் விசேட தொழுகைகளை நடாத்தியதுடன், தெவட்டகஹா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் றியாஸ் சாலி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பள்ளிவாசல் சார்பாக நினைவுச் சின்னத்தை வழங்கி வைத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பர்ஸான் முன்சூர், சுபி தரீக்காஸின் மத உயர் சபையின் செயலாளர் முப்தி அல் ஆலிம் முஸ்தபா ராசா, அறங்காவலர் சபை மொஹமட் ஹம்ஸா மற்றும் உலமாக்களும் கலந்துகொண்டனர்.