வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் உட்பட 1660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பேராதனையிலுள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மரணங்கள், கடுமையான குளிர் காலநிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் ஏற்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நோய்களாலும் மரணங்கள் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்த விலங்குகளை மனித நுகர்வுக்கு விற்க சிலர் முயற்சிப்பதாக வதந்தி பரவியதையடுத்து, 2022 டிசம்பர் 18ஆம் தேதி வரை கோழிக்கடைகளைத் தவிர அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
மோசமான வானிலை காரணமாக வட-கிழக்கு மாகாணங்களில் 1660 விலங்குகள் இறப்பு

Leave a comment