ஜனவரி 10, 2023, ஒட்டாவா: அந்நாட்டின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, இரண்டு சமீபத்திய ஜனாதிபதிகள் உட்பட இலங்கையின் நான்கு மூத்த தலைவர்கள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.
கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகித்த அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இலக்கு வைத்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான பாரிய எதிர்ப்புக்களுக்குப் பின்னர் கோட்டாபய கடந்த ஜூலையில் நாட்டை விட்டு தற்காலிகமாக வெளியேறினார், அதே நேரத்தில் மஹிந்த தனது பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
26 வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகு தமிழ் பிரிவினைவாதிகளைத் தோற்கடித்ததற்காக இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்கள் சகோதரர்களைப் பாராட்டினர், ஆனால் அவர்கள் இப்போது கனடாவில் எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
2000 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையில் பங்கு கொண்டதற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க உட்பட இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகளும் இதில் அடங்குவர். பொதுமக்களை கடத்தி பின்னர் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கடற்படைத் தளபதி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியும் இதில் அட்ங்குவார்.